/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்துவதில் சிக்கல் இரவு நேரத்தில் இயக்கிய பஸ்கள் நிறுத்தம்புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்துவதில் சிக்கல் இரவு நேரத்தில் இயக்கிய பஸ்கள் நிறுத்தம்
புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்துவதில் சிக்கல் இரவு நேரத்தில் இயக்கிய பஸ்கள் நிறுத்தம்
புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்துவதில் சிக்கல் இரவு நேரத்தில் இயக்கிய பஸ்கள் நிறுத்தம்
புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்துவதில் சிக்கல் இரவு நேரத்தில் இயக்கிய பஸ்கள் நிறுத்தம்
ADDED : செப் 25, 2011 09:52 PM
விருதுநகர்:விருதுநகரில் புதிய பஸ் ஸ்டாண்ட் இயக்கப்பட்டு வருகிறது. இரவு புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகளுக்காக இயக்கப்பட்ட இரவு நேர டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் இயக்கப்படாமல் 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. கலெக்டர் மு.பாலாஜியின் முயற்சியினால், பல தரப்பினரின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு புதிய பஸ் ஸ்டாண்டு செயல்படுத்தப்பட்டது.
இது வரை நான்கு வழிச்சாலையில் சென்ற பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சென்றன. இந் நிலையில் புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகளை இணைக்கும் வகையில் அரை மணி நேரத்திற்கு ஒரு டவுன் பஸ்கள் அரசு போக்குவரத்து கழகத்தினரால் இயக்கப்பட்டன. பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பம் காரணமாக பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதால் இரவு நேர பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது சகஜ நிலை திரும்பிய பிறகும் பஸ்கள் கடந்த இரு வாரங்களாக இயக்கப்படாததால் புதிய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் குடும்பத்துடன் இறங்கும் பயணிகள் தவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆட்டோக்கள் இல்லாததாலும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிப்படை வசதியான கழிப்பறைகள் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரும் நகராட்சி அதிகாரிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இது போன்று சிறு, சிறு காரணங்களால் புதிய பஸ் ஸ்டாண்ட் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இரவு நேர பஸ்கள் மீண்டும் இயக்கவும்,சீரமைக்கப்பட்ட கழிப்பறை திறக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.