/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வாள் விளையாட்டில் சான்று பெற்றால் முன்னுரிமை:தேவாரம்வாள் விளையாட்டில் சான்று பெற்றால் முன்னுரிமை:தேவாரம்
வாள் விளையாட்டில் சான்று பெற்றால் முன்னுரிமை:தேவாரம்
வாள் விளையாட்டில் சான்று பெற்றால் முன்னுரிமை:தேவாரம்
வாள் விளையாட்டில் சான்று பெற்றால் முன்னுரிமை:தேவாரம்
ADDED : ஆக 29, 2011 11:48 PM
சிவகங்கை:''வாள் விளையாட்டு போட்டியில் மாநில அளவில் சான்று பெறுவோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்,'' என, முன்னாள் டி.ஜி.பி., தேவாரம் பேசினார்.
சிவகங்கையில் வாள் விளையாட்டு கழகம் சார்பில், மாநில போட்டி நடந்தது. 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 22 மாவட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற 45 பேருக்கு பதக்கம் வழங்கி,முன்னாள் டி.ஜி.பி., தேவாரம் பேசுகையில்,:
இங்கு வெற்றி பெற்றவர்கள் செப்., 5 முதல் 9 வரை கோல்கட்டாவில் நடக்கும் தேசிய போட்டி யில் பங்கேற்பர்.கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு இப்போட்டியை ஊக்குவித்து வருகிறது. வாள் விளையாட் டில் அதிக அக்கறை காட்டினால், பதக்கம் நிச்சயம் உண்டு. மாநில அளவில் வாள் விளையாட்டில்வெற்றி பெற்று பார்ம்-2 சான்று பெறுபவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்,'' என்றார். வாள் விளையாட்டு கழக தலைவர் ஜான்நிக்கல்சன், கலெக்டர் ராஜாராமன், பன்னீர்செல்வம் எஸ்.பி., மன்னர் கல்வி நிறுவனங்களின் முகவாண்மை குழு உறுப்பினர் மகேஷ்துரை, பள்ளி செயலர் குமரகுரு, தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.