/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரளா சென்ற மாடுகளுக்கு சூலூரில் சிறை:பேச்சு நடத்திய போது எஸ்கேப்கேரளா சென்ற மாடுகளுக்கு சூலூரில் சிறை:பேச்சு நடத்திய போது எஸ்கேப்
கேரளா சென்ற மாடுகளுக்கு சூலூரில் சிறை:பேச்சு நடத்திய போது எஸ்கேப்
கேரளா சென்ற மாடுகளுக்கு சூலூரில் சிறை:பேச்சு நடத்திய போது எஸ்கேப்
கேரளா சென்ற மாடுகளுக்கு சூலூரில் சிறை:பேச்சு நடத்திய போது எஸ்கேப்
ADDED : ஜூலை 26, 2011 09:25 PM
சூலூர் : கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற லாரிகளை வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சிறைப்பிடித்தனர்.
ஆந்திராவிலிருந்தும், ஈரோடு, புளியம்பட்டி, சத்தியிலிருந்தும்; 200 க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஆறு லாரிகள் கேரளா சென்று கொண்டிருந்தன. நேற்றுமுன்தினம் காலை 10.00 மணிக்கு நீலம்பூர் எல் அண்ட் டி பை- பாஸ் ரோட்டில் சென்றபோது, வி.எச். பி., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் லாரிகளை மறித்து சிறைப்பிடித்தனர். லாரிகளை அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி மாடுகளை இறக்கினர். போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாகவும், மனித நேயத்துக்கு புறம்பாகவும், ஒவ்வொரு லாரியிலும்40 க்கும் அதிகமான மாடுகளை கருணை இல்லாமல், ஏற்றிசெல்கின்றனர். இளங்கன்று, பசு, எருது, எருமை உள்ளிட்ட கால்நடைகளின், கால்களை கட்டி பலகையின் மீது துணி மூட்டையை போல் அடைத்து வைத்துள்ளனர். லாரியில் மாடுகள் அதிக அளவில் நிறுத்தியதால், மாடுகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாததால், கொம்புகள் பட்டு காயமடைந்து ரத்தம் வடிந்தது. லாரி கேபினில் பசுக்கன்று ஒன்று கால்கள் கட்டிய நிலையில் ஏற்றி வந்தனர். பசுவதை சட்டத்தை மீறியவர்களை தண்டிக்க வேண்டும். பிராணிகள் வதை சட்டத்தின் கீழ் லாரியில் அழைத்துச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.எச்.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ்., தொண்டர்கள் போலீசாரிடம் கூறினர். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடம் சமாதானம் பேசி காலதாமதம் செய்தனர். நீண்டஇழுபறிக்குப் பின் மாடுகளை கோசாலைக்கு அனுப்ப முடிவு செய்தனர். அதற்குள் லாரிகளில் ஏற்றி வந்த மாடுகளை வியாபாரிகள் சப்தமில்லாமல் ஓட்டிச்சென்றனர்.