எம்.பி., வீடுகளின் முன் போராட்டம்: ஹசாரே குழு அழைப்பு
எம்.பி., வீடுகளின் முன் போராட்டம்: ஹசாரே குழு அழைப்பு
எம்.பி., வீடுகளின் முன் போராட்டம்: ஹசாரே குழு அழைப்பு
ADDED : ஆக 20, 2011 04:46 PM
புதுடில்லி :பொது மக்கள் அனைவரும் தங்கள் தொகுதி எம்.பி., வீடுகளின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என ஹசாரே குழு கேட்டு கொண்டனர்.
இதனை அறிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், பொது மக்களிடமிருந்து நிறைய ஆலோசகைள் கிடைக்கப்பெறுகின்றன என கூறினார். மேலும் அவர், மக்கள் அனைவரும் தங்கள் தொகுதி எம்.பி., வீடுகளின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த வேண்டும். அவர்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதா குறித்த பாதிப்புகள் மற்றும் கவலைகள் குறித்து கேள்வி கேட்க செய்ய வலியுறுத்த வேண்டும். இதனை அவர்கள் மறுத்தால் அடுத்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டோம் என கூறுங்கள் என கூறினார்.