/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பள்ளி மாணவியிடம் கேலி, கிண்டல் : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனுபள்ளி மாணவியிடம் கேலி, கிண்டல் : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
பள்ளி மாணவியிடம் கேலி, கிண்டல் : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
பள்ளி மாணவியிடம் கேலி, கிண்டல் : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
பள்ளி மாணவியிடம் கேலி, கிண்டல் : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
நாமக்கல்:'பள்ளிக்கு செல்லும்போது, தகாத வார்த்தையால் பேசி கேலி, கிண்டல் செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான், என் அப்பா, அம்மாவுடன் பச்சுடையாம்பாளையம் மூலக்காட்டில் வசித்து வருகிறேன். தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறேன். தினமும் எனது அப்பா சைக்கிளில் வந்து ஞாயிறு சந்தை வரை என்னை விட்டு விடுவார். நான் அங்கிருந்து பள்ளிக்கு நடந்து செல்வேன். நான் பள்ளிக்கு செல்லும்போது, தொப்பப்பட்டியைச் சேர்ந்த குமார் மற்றும் ஒருவர் பள்ளி 'கேட்' அருகில் நின்று கொண்டு, சிறு சிறு கற்களை என் மீது வீசி, 'ஏண்டி எங்க கூட பேசமாட்டியா? நாங்கள் உனக்கு தின்பதற்கு தீனி வாங்கி தருகிறோம்' எனக்கூறி, அசிங்கமாக பேசி 'டார்ச்சர்' செய்து வருகின்றனர்.
அதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அப்படியும் மீறி பள்ளிக்குச் சென்றால், அவர்கள் இருவரும் அசிங்கமாக பேசி கேலி செய்கின்றனர். அப்பாவிடமோ அல்லது உறவினர்களிடமோ சொன்னால், ஆஸிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டுகின்றனர். இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் குமார் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு மட்டுமே செய்துள்ளனர். சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.