ADDED : செப் 18, 2011 10:24 PM
விழுப்புரம்:விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் அண்ணா துரை பிறந்த நாள்
விழா பொதுக்கூட்டம் நடந்தது.விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடந்த
கூட்டத்திற்கு நகர செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் யூசுப்,
முன்னாள் கவுன்சிலர் ஜானகிராமன் வரவேற்றனர். நகர நிர்வாகிகள் அன்பழகன்,
அமுதா முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், மோகனன்,
மாவட்ட இளைஞரணி பசுபதி, மாணவரணி செங்குட்டுவன், அண்ணா தொழிற்சங்கம்
அற்புதவேல், எம்.ஜி.ஆர்., மன்றம் குருநாதன், கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
வழக்கறிஞர்கள் பொன்சிவா, ராமலிங்கம், எம்.ஜி.ஆர்., மன்றம் ராமச்சந்திரன்,
கவுன்சிலர் மல்லிகா, பேரவை பொருளாளர் ரகுநாதன், இளைஞர் பாசறை மணிகண்டன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.