நம்பகத் தன்மையை உறுதி செய்க: பாக்.,கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
நம்பகத் தன்மையை உறுதி செய்க: பாக்.,கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
நம்பகத் தன்மையை உறுதி செய்க: பாக்.,கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2011 12:32 AM

வாஷிங்டன்:'அமெரிக்காவின் ராணுவ உதவியைப் பெற வேண்டுமானால், நாங்கள் கூறிய ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை, ஏற்கனவே பலமுறை கூறியுள்ளோம். எங்களது ராணுவ உதவியைப் பெற வேண்டுமானால், பாக்., இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும்.ராணுவ நிதியுதவி நிறுத்தப்பட்டிருப்பது எங்களது கொள்கை மாற்றத்தை காட்டாது. எந்த மாதிரியான நிதி உதவி தேவைப்படுகிறது என்பது குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். பாக்., உடனான நட்பு எளிதானதல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், எங்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த நாடாக பாகிஸ்தானை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.இவ்வாறு ஹிலாரி தெரிவித்தார்.