/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடும்ப நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடம் பெறுவது எப்படி?: தஞ்சை கலெக்டர் யோசனைகுடும்ப நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடம் பெறுவது எப்படி?: தஞ்சை கலெக்டர் யோசனை
குடும்ப நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடம் பெறுவது எப்படி?: தஞ்சை கலெக்டர் யோசனை
குடும்ப நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடம் பெறுவது எப்படி?: தஞ்சை கலெக்டர் யோசனை
குடும்ப நலத்திட்டத்தில் தமிழகம் முதலிடம் பெறுவது எப்படி?: தஞ்சை கலெக்டர் யோசனை
ADDED : ஜூலை 12, 2011 12:12 AM
தஞ்சாவூர்: ''குடும்ப நலத்திட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நவீன ஆண் குடும்ப நல சிகிச்சை முறையை, ஆண்களும் ஏற்று பயனடைந்தால் தமிழகம் முதலிடத்தை பெறுவது உறுதி,'' என்று தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தஞ்சை திலகர் திடலில் இருந்து புறப்பட்ட பேரணியை கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் குடும்ப நல (பொறுப்பு) முஹம்மது ஜான் வரவேற்றார். பேரணியில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 'நர்சிங்' மாணவிகள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, போன் செக்கர்ஸ், மன்னை நாராயணசாமி நர்சிங் கல்லூரி, குந்தவை நர்சிங் கல்லூரி, உமா மகேஷ்வரனார் அறிவியல் கலை கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா நற்பணி மன்ற மாணவர்கள் உட்பட பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழிப்பணர்வு பேரணியை துவக்கி வைத்து கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: உலகிலேயே குடும்ப நலத்திட்டத்தை முதன் முதலாக ஓர் அரசின் திட்டமாக செயல்படுத்திய நாடு இந்தியா. குடும்ப நலத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முதலாவது இடத்தை கேரள மாநிலம் வகிக்கிறது. நம் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தை வகிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. கேரள மாநிலம் முதலிடத்தை வகிப்பதுக்கு தலையாய காரணம் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றிருப்பதே ஆகும். தமிழகத்தில் குறைந்த அளவு பெண்களே கல்வி கற்றிருப்பினும், குடும்ப நலத்திட்ட வெற்றியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதுக்கான காரணம் நல்ல சமுதாய தலைவர்கள் தன்னலமற்ற அரசியல் தலைவர்கள், திறமையான நிர்வாகம், செயல்படுத்தப்படுகிற சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்கள், திறமை வாய்ந்த குடும்ப நல கண்காணிப்பாளர்கள், சிறப்பான தகவல், கல்வி தொடர்பு பணிகள், பொறுப்புள்ள தாய்மார்கள் ஆகியோரே காரணமாவர். குடும்ப நலத்திட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நவீன ஆண் குடும்ப நல சிகிச்சை முறையை, ஆண்களும் ஏற்று பயனடைந்தால் தமிழகம் முதலிடத்தை பெறுவது உறுதி. தற்போது தமிழகத்தில் நலத்திட்டத்தை ஏற்போர் விகிதம் 43.5 விழுக்காடாக உள்ளது. இதை 60 சதவீதமாக விழுக்காடாக ஆக்குவதே நமது தலையாய பணி. தமிழகத்தில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து முழக்கம் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தின் பிறப்பு விகிதம் ஆயிரத்துக்கும் 16.3 ஆக உள்ளது. இதை நடப்பு ஆண்டுகளில் 15 ஆக குறைத்திடுவதே குறிக்கோளாகும். சிசு மரண விகிதத்தை 28ல் இருந்து 20ஆக குறைக்க அரும்பணி ஆற்றப்படுகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பினை முற்றிலுமாக இல்லாமல் செய்வதுக்காக சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.