/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வள்ளியூர் காந்தி காலனியில் கழிப்பறை அமைக்க கோரிக்கைவள்ளியூர் காந்தி காலனியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
வள்ளியூர் காந்தி காலனியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
வள்ளியூர் காந்தி காலனியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
வள்ளியூர் காந்தி காலனியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 15, 2011 01:30 AM
வள்ளியூர் : வள்ளியூர் காந்தி காலனி மக்களுக்கு நிரந்தரமாக சுடுகாடு மற்றும் கழிப்பறை கட்டடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது.இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-வள்ளியூர் டவுன் பஞ்., அலுவலகத்திற்கு அருகில் காந்தி காலனி உள்ளது.
இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏழை கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த இவர்களுக்கு அப்பகுதியில் கழிப்பறை வசதியில்லை. மேலும் இக்குடும்பங்களை சேர்ந்த இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடும் இல்லை.எனவே இங்கு நிரந்தரமாக சுடுகாடு வசதியும், கழிப்பறை கட்டடங்களும் கட்டிக் கொடுக்க வேண்டுமென்று அருந்ததி சமுதாய மக்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.


