/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சிநெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி
நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இசை நிகழ்ச்சி
திருநெல்வேலி : நெல்லை சங்கீத சபாவில் நன்கொடையாளர்கள் வாரத்தை முன்னிட்டு நாதஸ்வரம், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், உபன்யாசம் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.
சபாவில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நன்கொடையாளர்கள் வாரம் கொண்டாடப்படவுள்ளது. சபாவின் வளர்ச்சிக்கு உறுதுணையான நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாம்பலம் எம்.கே.எஸ்.சிவா குழுவினரின் நாதஸ்வரம் இன்னிசையும், 15ம் தேதி திருவனந்தபுரம் மிதிலாலயா நடன அகாடமி மைதிலி குழுவினரின் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி நடனங்கள் நடக்கிறது. 16ம் தேதி மதுரை மணிஐயரின் மருமகன் சென்னை பத்மபூஷன் டி.வி.சங்கரநாராயணன் இசை நிகழ்ச்சியும், 17ம் தேதி தியாகராஜ சுவாமிகளின் சரித்திரம் குறித்து விசாகா ஹரியின் சங்கீத உபன்யாசமும், 18ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த கர்நாடக இசை, மெல்லிசையில் பிரபலமான அஸ்வதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி துவக்க நாள் நிகழ்ச்சியில் இந்திரா கிருஷ்ணமூர்த்தி இறைவணக்கம் பாடுகிறார். லோகா சுப்பிரமணியன் திருவிளக்கு ஏற்றுகிறார். சங்கீத சபா தலைவர் வி.எஸ்.வேலாயுதம் வரவேற்கிறார். 65 ஆண்டுகளில் சங்கீத சபா குறித்து சபா செயலாளர் நடேசன் விளக்குகிறார். நன்கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சபா இணைச் செயலாளர் தளவாய் ராமசாமி நன்றி கூறுகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.