/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பாதியில் நிற்கும் விவசாய அலுவலக கட்டடப்பணி: ரூ.22 லட்சம் வீணடிப்புபாதியில் நிற்கும் விவசாய அலுவலக கட்டடப்பணி: ரூ.22 லட்சம் வீணடிப்பு
பாதியில் நிற்கும் விவசாய அலுவலக கட்டடப்பணி: ரூ.22 லட்சம் வீணடிப்பு
பாதியில் நிற்கும் விவசாய அலுவலக கட்டடப்பணி: ரூ.22 லட்சம் வீணடிப்பு
பாதியில் நிற்கும் விவசாய அலுவலக கட்டடப்பணி: ரூ.22 லட்சம் வீணடிப்பு
ADDED : செப் 06, 2011 11:52 PM
கமுதி : கமுதியில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கட்டடப்பணி, 20 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது.
கமுதியில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, உலக வங்கியிடம் இருந்து 22 லட்சத்து 80 ஆயிரம் கடன் பெற்று கட்டடம் கட்டும் பணி 1990-91ல் துவக்கப்பட்டது. பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக வாடகை மற்றும் யூனியன் அலுவலக பழைய கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய போதே, திருவாடானை, முதுகுளத்தூருக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த ஊர்களில் கட்டடப் பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விட்டது. கமுதியில் கிட்டங்கி வசதி இல்லாததால், உரம் மற்றும் விதைகளை பாதுகாப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் இங்கு அதிகளவில் நெல், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை பாதுகாக்கவும் இடவசதி இல்லை. கொள்முதல் செய்யப்படும் பாதி பொருள்களை 40 கி.மீ., தொலைவில் உள்ள பரமக்குடிக்கு அனுப்பி வைக்கின்றனர். அதிகாரிகளின் மெத்தனபோக்கால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கட்டடப்பணியை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.