பாரபட்சமற்ற விசாரணை தேவை: யோகிக்கு ராகுல் கடிதம்
பாரபட்சமற்ற விசாரணை தேவை: யோகிக்கு ராகுல் கடிதம்
பாரபட்சமற்ற விசாரணை தேவை: யோகிக்கு ராகுல் கடிதம்
UPDATED : ஜூலை 07, 2024 04:30 PM
ADDED : ஜூலை 07, 2024 03:38 PM

புதுடில்லி: 'ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில், சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும். சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தேவைப்படும் எந்த உதவிகளையும் செய்வதற்கு காங்கிரஸ் தொண்டர்களும் தயாராக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நான் பேசும் போது அவர்கள் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதகாக இருக்காது என்று தெரிவித்தனர். 80,000 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் இவ்வளவு பேர் எப்படி அங்கு கூடினார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.