/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பலிநெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பலி
நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பலி
நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பலி
நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் பலி
ADDED : ஆக 30, 2011 12:07 AM
திருநெல்வேலி : நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த வாலிபர் இறந்தார்.
நெல்லை அருகே தாழையூத்திற்கும், கங்கைகொண்டானுக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் ஒருவர் இறந்துகிடப்பதாக நெல்லை ரயில்வே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி விசாரணை நடத்தினார்.
இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவருக்கு 35 வயது இருக்கலாம், 28ம்தேதி எடுக்கப்பட்ட சாத்தூர் - எர்ணாகுளம் வழித்தட டிக்கட் அவரிடம் இருந்தது, சென்னை - குருவாயூர் ரயிலில் பயணம் செய்த அவர் படிக்கட்டில் இருந்த போது தவறி கீழே விழுந்துள்ளார், முகத்தில் அடிபட்டு அதே இடத்தில் இறந்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாலிபர் சட்டைக்காலர் ஸ்டிக்கரில் மதுரை தையல் கடை பெயர் உள்ளது. இறந்தவர் சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்தவரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


