/உள்ளூர் செய்திகள்/கரூர்/பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?
பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?
பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?
பழைய கட்டிடத்தில் மீண்டும் நகராட்சி கூட்டம் தி.மு.க., - காங்., போராட்டம் இன்றும் நடத்துமா?
கரூர்: கரூர் நகராட்சிக் கூட்டம் இன்று (30 ம் தேதி) பழைய கூட்ட அரங்கில் (பெத்தாச்சி மண்டப்பத்தில்) நடப்பதாக தீர்மான நகல்கள் கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு குளித்தலையில் நடந்த அரசு விழாவில் திறந்து வைத்தார். இதையடுத்து 'புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடக்கும்' என கவுன்சிலர்கள் எதிர்பார்த்தனர். பணிகள் பாக்கியுள்ளதாக கூறி பழைய கட்டிடத்திலேயே நகராட்சி கூட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் சுமார் இரண்டு மாத காலமாக புதிய நகராட்சி கட்டிடம் திறந்து விடப்படவில்லை. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு, தி.மு.க., வை சேர்ந்த நகராட்சி தலைவர் சிவகாம சுந்தரி உள்ளிட்ட கவுன்சிலர்கள், புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடத்த வசதியாக, பூட்டப்பட்ட கட்டிடத்தை திறக்க வேண்டும்' என மாவட்ட கலெக்டர் ÷ஷாபனாவிடம் மனு கொடுத்தனர். ஆனால் புதிய கட்டிடம் திறந்தபாடில்லை.
கடந்த ஜூன் மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில், 'அடுத்த மாதம் புதிய கட்டிடத்தில் கூட்டம் நடக்கும்' என நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி தெரிவித்தார். இதையடுத்து பழைய கட்டிடத்தில் உள்ள நகராட்சி அரங்கில் தற்போதைய கவுன்சிலர்கள் குரூப் ஃபோட்டோ எடுத்து கொண்டனர். ஆனால், கடந்த மாதமும் பழைய கட்டிடத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதைக் கண்டித்து தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி, 'புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஈடுப்பட்ட தி.மு.க., காங்., கவுன்சிலர்களை நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி நேரில் சென்று சமாதானம் பேசி அழைத்தார். அதனால் மீண்டும் தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.