Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேலப்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மேலப்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மேலப்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மேலப்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ADDED : ஆக 28, 2011 01:12 AM


Google News

திருநெல்வேலி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 400 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேலப்பாளையத்தில் நடந்தது.

விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ., சம்சூல் ஆலம் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் துராப்ஷா முன்னிலை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோதர்மைதீன் 400 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் பாட்டப்பத்து முகம்மது அலி, சாகுல் அமீது, தென்காசி முஹிப்பில்லா ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீரான்மைதீன், கவுன்சிலர் முகைதீன், அப்துல் காதர், அப்துல் ரகுமான், சம்சூல் ஆலம், ஜப்பார் ஷா, காஜா உட்பட பலர் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us