ADDED : ஆக 26, 2011 01:33 AM
குற்றாலம்:குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.குற்றாலத்தில்
நேற்று காலையில் வெயில் தாக்கம் குறைவாக இருந்தது.
மதியம் மழைமேக
கூட்டங்கள் பொதிகை மலையை வலம் வந்தது. அப்போது இதமான தென்றல் காற்று வீசவே,
மழைமேக கூட்டங்கள் சாரல் மழையை பொழிந்தது. இதனால் மிகவும் ரம்யமான
சூழ்நிலை நிலவியது.மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று
அதிகரித்து காணப்பட்டது. சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவியிலும்
தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி அருவியில் நீண்ட நேரம்
நின்று குளித்து மகிழ்ந்தனர்.