/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுமா...குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுமா...
குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுமா...
குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுமா...
குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுமா...
ADDED : ஆக 13, 2011 01:25 AM
குற்றாலம் : போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
நெல்லை மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம், பெண்
குழந்தைகள் கடத்தல், பிச்சை எடுக்கும் இளம் குழந்தைகள் போன்ற சம்பவங்களை
தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க மாவட்டத்தில் ஒரு நன்னடத்தை
அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும்
வேளையில் முதல் கட்ட பணியாக சில குழந்தை திருமணங்கள் தடுத்து
நிறுத்தப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி
மன்ற தலைவர்கள், ஆசிரியர்கள், சமூகநலத்துறை அதிகாரிகள், தொண்டு
நிறுவனங்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போதிய
விழிப்புணர்வுடன் இல்லாததால் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இத்திட்டம்
முழுமையாக முடங்கி கிடக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ரோட்டில்
சுற்றித்திரியும் இளம் பெண்கள் மீட்கப்படுவதில்லை. பிச்சை எடுக்கும் இளம்
குழந்தைகளை மீட்டு அரசு காப்பகங்கள் மூலம் பாதுகாத்து, படிக்க உதவி செய்ய
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை
பகுதிகளில் குழந்தைகள் பிச்சை எடுப்பதும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
பாலியல் தொந்தரவுக்களுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று
வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு
திட்டத்திற்கு அரசு போதிய நிதி ஒதுக்கியும், சரியாக அமல்படுத்தப்படவில்லை
என தெரிய வருகிறது. எனவே இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம்
செலுத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென்பதே அனைவரின்
எதிர்பார்ப்பாக உள்ளது.


