/உள்ளூர் செய்திகள்/மதுரை/"வந்தார்... பார்த்தார்... சென்றார்'அவ்வளவு தான் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் "விசிட்'"வந்தார்... பார்த்தார்... சென்றார்'அவ்வளவு தான் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் "விசிட்'
"வந்தார்... பார்த்தார்... சென்றார்'அவ்வளவு தான் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் "விசிட்'
"வந்தார்... பார்த்தார்... சென்றார்'அவ்வளவு தான் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் "விசிட்'
"வந்தார்... பார்த்தார்... சென்றார்'அவ்வளவு தான் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் "விசிட்'
ADDED : ஜூலை 27, 2011 05:25 AM
மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரியை முதன்முறையாக பார்வையிட சுகாதார அமைச்சர்
விஜய், 'வந்தார், பார்த்தார், சென்றார்' என்ற அளவில் 'விசிட்'
செய்தார்.பொறுப்பேற்ற பின் முதன்முறையாக மதுரை வந்த அவர், அரசு
ஆஸ்பத்திரியின் விரிவாக்கக் கட்டடத்தை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்
செல்லூர் ராஜூ, மருத்துவ கல்வி இயக்குனர் சி.வம்சதாரா, ஆஸ்பத்திரி
கண்காணிப்பாளர் சிவகுமார், துணை கண்காணிப்பாளர் ராமானுஜம்,
ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன், ஏ.ஆர்.எம்.ஓ.,
காந்திமதிநாதன், எம்.எல்.ஏ.,க்கள் போஸ், முத்துராமலிங்கம், கருப்பையா,
அண்ணாதுரை, அ.தி.மு.க., நிர்வாகிகள் ராஜன்செல்லப்பா, எம்.எஸ்.பாண்டியன்
உட்பட பலர் சென்றனர்.விரிவாக்கக் கட்டடத்தின் தீவிர சிகிச்சை பிரிவு,
ஆப்பரேஷன் தியேட்டர்கள், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு, எக்ஸ்ரே
பிரிவு, கட்டுப்போடும் பிரிவு உட்பட சில பகுதிகளை பார்வையிட்டார்.
அவரிடம், ''புதிய ஆஸ்பத்திரி எப்போது செயல்படத் துவங்கும்,'' என கேள்வி
எழுப்பினர். 'இங்கு இன்னும் சில பணிகள் பாக்கி இருக்கின்றன. இதை ஆய்வு
செய்யவே வந்தேன். எவ்வளவு சீக்கிரம் துவக்க முடியுமோ அத்தனை சீக்கிரம்
துவக்கப்படும்,'' என்றார். பின்னர் மெயின் பில்டிங்கிற்கு வந்தார்.
முதன்முறையாக வந்த அமைச்சர் வார்டுகளை பார்வையிடுவார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் தலைமை டாக்டர்களுடன் ஆய்வு நடத்தினார். பின் கன்னியாகுமரி
மாவட்டத்தில் 'நைட்ரஸ் ஆக்சைடு' தவறாக வழங்கி கோமா நிலைக்குச் சென்ற நோயாளி
ருக்மணி சிகிச்சை பெறும் தீவிர சுவாசப் பிரிவுக்குச் சென்று அவரை
பார்வையிட்டார். பின் சிவகங்கை புறப்பட்டுச் சென்றார். எம்.எல்.ஏ., கோபம்:
அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பி பதில் பெற நிருபர்கள் கூடவே ஓடி ஓடி
வந்தனர். அவர் நிருபர்களை சந்திக்கவே இல்லை. எப்போதும் நிருபர்களிடம்
கலகலப்பாக பேசும் செல்லூர் ராஜூவும், அமைச்சர் விஜய் நிருபர்களிடம்
பேசிவிடாதபடி பார்த்துக் கொண்டார்.முன்னதாக அண்ணாதுரை எம்.எல்.ஏ., அமைச்சரை
சந்தித்து மனு கொடுக்க சர்க்யூட் ஹவுசில் காத்திருந்தார். அமைச்சர் ஓட்டல்
ஒன்றில் தங்கியிருப்பதை அறிந்து அங்கு விரைந்தார். அதற்குள் அமைச்சர்
ஆஸ்பத்திரி புதிய கட்டடத்தை பார்வையிட புறப்பட்டார். இதனால் சற்று கோபமான
எம்.எல்.ஏ., ஆஸ்பத்திரிக்கு விரைந்து,அங்கு அமைச்சருக்கு சால்வை
அணிவித்துவிட்டு உடனே புறப்பட்டார். நிலைமையை புரிந்து கொண்ட செல்லூர்
ராஜூ, ''தொகுதி எம்.எல்.ஏ., நீங்களும் உடனிருங்கள்,'' என கூறி அவருடைய
மனுவை அமைச்சர் விஜயிடம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அண்ணாதுரை எம்.எல்.ஏ.,
கூறுகையில், ''புதிய கட்டடத்திற்கு மத்திய அரசிடம் ரூ. 10 கோடி
பெறவேண்டும். அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். அரசு
ஆஸ்பத்திரி, பாலரங்காபுரம், தோப்பூர் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ. 4.5 கோடி
நிதிஒதுக்க வேண்டும்,'' என்றார்.
காரை தட்டியவருக்கு அடி : அமைச்சர் விஜ#யின் ஆஸ்பத்திரி 'விசிட்'
முடிந்ததும் அவர் காரில் ஏறி புறப்பட்டார். தீவிர சுவாசப் பிரிவு பகுதி
அருகில் இருந்து அவர் புறப்பட்டபோது, அவரது காரைத் தொடர்ந்து ஏ.கே.போஸ்
எம்.எல்.ஏ., வின் காரும் சென்றது. அந்தக் காரை கூட்டத்தில் இருந்த ஒரு
இளைஞர் கையால் ஓங்கித் தட்டினார். அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அந்த
இளைஞரை அடிக்கத் துவங்கினர். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு
தள்ளிச் சென்றனர். அவரிடம் விசாரித்தனர். அவரது பெயர் ஹரிகரசுதன்(22).
மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். பெற்றோருடன் ஆஸ்பத்திரிக்கு வந்த
அவர், கார் மிகஅருகில் உரசியபடி சென்றதால் கையால் தட்டியதாக
தெரிவித்துள்ளார்.