/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் : தேசியவாத காங்.,கோரிக்கைஅரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் : தேசியவாத காங்.,கோரிக்கை
அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் : தேசியவாத காங்.,கோரிக்கை
அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் : தேசியவாத காங்.,கோரிக்கை
அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் : தேசியவாத காங்.,கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
புதுச்சேரி : ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்., தலைவர் சுந்தரமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு, ரேஷன் அரிசி கடத்தி வருவது குறித்து கவர்னர், தலைமை செயலர், குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தி வரப்பட்ட 260 மூட்டை அரிசியை தமிழக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்திய உணவுக் கழக அதிகாரிகள் முறைகேடுகள் குறித்தும், கடத்தல் சம்மந்தமான தகவல்கள் குறித்து தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகிறோம். புதுச்சேரி முதல்வரும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் கண்காணிப்பு தனி படை அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடத்தலுக்குரிய இடமான முள்ளோடை, சேலியமேடு ஆகிய பகுதிகளில் உணவுக் கடத்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.