குன்னூர் : அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி வகுப்பு முகாம் நடந்தது.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போஜன் வரவேற்றார்.
பள்ளி முதல்வர் லெனின் துவக்கி வைத்தார். உலக சமுதாய சேவா சங்கத்தின் பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,'' யோகாசன கலையால் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவவை ஒருங்கிணைந்து செம்மையாக செயல்படும்; இதனால், மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியின் கவனம் செலுத்த முடியும்,'' என்றார். உலக சமுதாய சேவா மன்றத்தின் அருவங்காடு கிளையை சேர்ந்த பயிற்றுனர்கள் கவிதா, ஹேமாவதி பயிற்சி வழங்கினர். பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


