ADDED : ஜூலை 17, 2011 01:33 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் நாப்பாளையத் தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(30).
இவரிடம் விழுப்புரம் வைகுண்ட வாசர் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த 2009 டிசம்பர் 23ம் தேதி நகை செய்து தருவதாக கூறி 180 கிராம் தங்கத்தை வாங்கிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய். இதுவரை நகையை திருப்பி தரவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.