நாளை முதல் குழந்தைகள் திரைப்பட விழா
நாளை முதல் குழந்தைகள் திரைப்பட விழா
நாளை முதல் குழந்தைகள் திரைப்பட விழா
ADDED : ஜூலை 17, 2011 01:27 AM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் குழந்தைகள் திரைப்பட விழா நடக்கிறது.
ஊட்டியில் நாளை முதல் 23ம் தேதி வரை குழந்தைகள் திரைப்பட விழா மத்திய மாநில அரசின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது. ஊட்டி அசெம்பளி தியேட்டரில் சுந்தரகாண்ட மகாபாரதம் (75 நிமிடங்கள்), அலங்கார் தியேட்டரில் 'அதிசய கோடு' (90 நிமிடங்கள்), கணபதியில் 'ஹயாத்' (80 நிமிடங்கள்), லிபர்ட்டியில் 'ஆயிசா' (32 நிமிடங்கள்) மற்றும் 'முதலில் நீங்கள்', கெம்பேகவுடரில் 'ஆறுபேர் ஆர்ப்பாட்டம்' (82 நிமிடங்கள்) போன்ற குழந்தைகளுக்கான திரைப்படம் காலை 9.30 மணிக்கு இலவசமாக காண்பிக்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச நுழைவு சீட்டுகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்த படங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவக்க விழா ஊட்டி அசெம்பிளி தியேட்டரில் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் விழாவை துவக்கி வைக்கிறார். இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம், மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.