/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனுநீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு
நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு
நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு
நீலகிரி விவசாயிகளுக்கு உரம் ஒதுக்க மனு
ஊட்டி : 'நீலகிரி விவசாயிகளுக்கு 512 மெட்ரிக் டன் 'டிஏபி' உரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில வேளாண்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்ட வேளாண் பயிர்களான உருளைக்கிழங்கு, மலை காய்கறிகள், தேயிலை ஆகியவற்றுக்கு கலப்பு மற்றும் தனி உரமாகவும், பயிர்களுக்கு மேல் மற்றும் அடி உரமாகவும் 'டிஏபி' உரம் இடப்படுகிறது.
இரண்டாம் போக பயிர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான 145 மெட்ரிக் டன்னுக்கு, வெறும் 20 டன் மட்டும் அனுமதித்துள்ளது விவசாயிகளை பாதிக்க செய்துள்ளது. எனவே, மகசூல் பாதிப்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அரசு ஒதுக்கி வரும் டிஏபி உரத்தை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும். இரண்டாம் போகம் பயிர் சாகுபடிக்கு உரம் தேவையாக இருப்பதாலும், மழை காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 512 மெட்ரிக் டன் டிஏபி உரம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.