/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சியில் போலி பத்திரம்: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குகள்ளக்குறிச்சியில் போலி பத்திரம்: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் போலி பத்திரம்: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் போலி பத்திரம்: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் போலி பத்திரம்: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 13, 2011 01:06 AM
விழுப்புரம் : போலி பத்திரம் தயாரித்து தனக்குரிய இடத்தை அபகரிக்க
முயற்சிப்பதாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் விழுப்புரம் எஸ்.பி.,
அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாமந்தூர் சாலையை
சேர்ந்தவர் சையத்உமர்(53). இவர் கடந்த 2004ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள
மாமந்தூர் சாலையில் 1300 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை சையத் ஹாசீம்
என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இந்த இடத்தில் கடந்த 10ம் தேதி
வீடு கட்டும் பணியை துவங்க சென்ற சையத் உமரை, அதே பகுதியை சேர்ந்த ஷா அலாம்
தடுத்துள்ளார். இந்த இடத்தை கடந்த 1995ம் ஆண்டு சையத் ஹாசீம் தந்தை
கோரிபீபீ என்பவரிடமிருந்து தான் வாங்கியுள்ளதாக கூறி பிரச்னை செய்துள்ளார்.
இது பற்றி சையத்உமர் கேட்டபோது, தான் அந்த இடத்தை சட்டப்படி விற்பனை
செய்துள்ளதாக சையத் ஹாசீம் கூறியுள்ளார். இந்நிலையில் தனது இடத்தின் மீது
ஷா அலாம் போலி பத்திரம் தயாரித்து மிரட்டுவதாக விழுப்புரம் எஸ்.பி.,
சேவியர் தனராஜை சந்தித்து நேற்று முன்தினம் மாலை சையத் உமர் புகார் மனு
கொடுத்தார்.இதனையடுத்து எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு
இன்ஸ்பெக்டர் சிவரா ஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின் றனர்.