வீடியோகான் காலாண்டு நிகரலாபம் 14% அதிகரிப்பு
வீடியோகான் காலாண்டு நிகரலாபம் 14% அதிகரிப்பு
வீடியோகான் காலாண்டு நிகரலாபம் 14% அதிகரிப்பு
ADDED : ஆக 13, 2011 10:51 AM
புதுடில்லி : வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.175.63 கோடிகளை லாபமாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.153.69 கோடிகளை இந்நிறுவனம் லாபமாக பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை லாபம் ரூ.14.89 சதவீதம் அதிகரித்து ரூ.3324.59 கோடியாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் வீடியோகான் நிறுவனத்தின் விற்பனை ரூ.6507.15 கோடியாக இருந்த போதிலும் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.342.32 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.