ADDED : செப் 01, 2011 08:16 PM
ஆமதாபாத்: குஜராத் கவர்னரை திரும்பப்பெறக் கோரி, மாநில முதல்வர் நரேந்திர மோடி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியை நியமனம் செய்த விவகாரத்தில் குஜராத் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில், நீதிபதி நியமனத்தை சட்ட விரோதம் என்று அறிவித்துள்ள மோடி, கவர்னரை திரும்பப்பெறக்கோரி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.