Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தை முனைஞ்சிப்பட்டியில் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தை முனைஞ்சிப்பட்டியில் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தை முனைஞ்சிப்பட்டியில் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தை முனைஞ்சிப்பட்டியில் திறப்பு

ADDED : ஆக 13, 2011 01:22 AM


Google News
நான்குநேரி : நான்குநேரி யூனியன் முனைஞ்சிப்பட்டியில் ரூ.33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தையை இன்று (13ம் தேதி) மாலை 2 மணிக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் திறந்து வைக்கிறார்.

நான்குநேரி யூனியன் முனைஞ்சிப்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை மூலம் கிராம சந்தை 33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் யூனியன் சேர்மன் சாலமோன்ராஜா முயற்சியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (13ம் தேதி) மாலை 2 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். யூனியன் சேர்மன் சாலமோன்ராஜா வரவேற்கிறார். புதுப்பிக்கப்பட்ட கிராம சந்தையை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் திட்ட இயக்குநர் அமானுல்லாஹ், எம்.எல்.ஏ.,நாராயணன், நான்குநேரி தொகுதி செயலாளர் விஜயநாராயணம் ஆர்.எஸ்.முருகன் உட்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நான்குநேரி யூனியன் கமிஷனர் சுந்தரவடிவேல் நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை யூனியன் சேர்மன் சாலமோன்ராஜா, வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவடிவேல் மற்றும் யூனியன் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us