/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போதிய மழையில்லாமல் ஆடிப்பட்டம் பாதிப்பு :40 சதவீத நிலங்களில் சாகுபடி இல்லைபோதிய மழையில்லாமல் ஆடிப்பட்டம் பாதிப்பு :40 சதவீத நிலங்களில் சாகுபடி இல்லை
போதிய மழையில்லாமல் ஆடிப்பட்டம் பாதிப்பு :40 சதவீத நிலங்களில் சாகுபடி இல்லை
போதிய மழையில்லாமல் ஆடிப்பட்டம் பாதிப்பு :40 சதவீத நிலங்களில் சாகுபடி இல்லை
போதிய மழையில்லாமல் ஆடிப்பட்டம் பாதிப்பு :40 சதவீத நிலங்களில் சாகுபடி இல்லை
ADDED : ஆக 11, 2011 02:28 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு மழை கைகொடுக்காத நிலையில் ஆடிப்பட்டம் சாகுபடி பணிகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
40 சதவீதம் மானாவாரி நிலங்கள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. போதிய பருவ மழையில்லாமல் ஆண்டுக்கு, ஆண்டு சாகுபடி பரப்புகள் குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனையாக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. ஒரு காலத்தில் விவசாய உற்பத்தியில் முன்னணியில் இருந்து தர்மபுரி மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளில் விவசாய பணிகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு, விவசாய தொழில் நஷ்டத்தை தரும் நிலையை உருவாக்கியுள்ளது. போதிய பருவமழை இல்லாமை, பருவ மழைக்காலங்களில் நீர் சேமிக்க முடியாமல் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால், ஆண்டுக்கு, ஆண்டு சாகுபடி பரப்புகள் குறைந்து விவசாய பணிகளில் இருந்து மாற்று தொழிலுக்கு விவசாயிகள் மாறும் அவலம் இருந்து வருகிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரி 686.89 மி.மீட்டர் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை அடிப்படையாக கொண்டு விவசாய பணிகள் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 70 சதவீதம் நிலங்கள் மேட்டுப்பகுதியாகவும், மானாவாரி நிலங்களாகவும் உள்ளன. மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ஏரி, குளங்கள், குட்டைகள் இருந்த போதும், கடந்த ஐந்தாண்டுகளில் நீர் வழிக்கால்வாய்கள் பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், சராசரி மழை பெய்த போதும், நீர் ஆதாரங்களில் நீர் சேமிப்பு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையான தென்மேற்கு பருவ மழையின் போது, மாவட்டத்தின் நீர் ஆதாரங்களில் 40 முதல் 60 சதவீதம் வரையில் நீர் சேமிக்கப்படும். மானாவாரி நிலங்கள் மற்றும் இறவை பாசன பகுதிகளில் ஜூலை மாதத்துக்கு பின் மழையை வைத்து ஆடிப்பட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். இந்தாண்டு எதிர்பார்த்த அளவில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. ஜூலை முதல் தற்போது வரையில் சில நாட்கள் மழை பெய்தாலும், அந்த மழை விவசாய பணி தேவைக்கு ஏற்ப பெய்யவில்லை. ஜூலை மாத இறுதியில் பெய்த மழையை வைத்து விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடிக்காக நிலங்களை உழுது விதைப்பு பணிக்கு தயார் நிலையில் நிலங்களை வைத்திருந்தனர்.ஆனால், அதன் பின் வெறும் சாரல் மழை பெய்ததால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இறவை பாசன பகுதியில் மட்டும் எண்ணெய் வித்து பயிர்கள், தானிய பயிர்கள், குச்சி கிழங்கு உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மானாவாரி நிலங்களில் உழுது நிலத்தை சீர் செய்தும் போதிய மழை இல்லாததால் 40 சதவீதம் மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல விவசாயிகள் நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். வரும் நாட்களில் மழை கைகொடுத்தால் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பட்டம் வழக்கம் போல் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் இல்லையென்றால், உணவு உற்பத்தியை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.