ADDED : செப் 23, 2011 10:00 PM
திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய 'டெபாசிட்'
தொகை மற்றும் ஆவணங்கள் விவரம் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி மேயராக
போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர், 4,000 ரூபாய் 'டிபாசிட்'
தொகையும், மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள், 2,000 ரூபாய்; ஆதி
திராவிடர் ஒதுக்கீடு பெற்ற வேட்பாளர் 1,000 ரூபாய் 'டெபாசிட்' தொகையும்
செலுத்தி, வேட்பு மனுவுடன் முழு சொத்து விவரங்கள் அடங்கிய உறுதிமொழி
பத்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்
வேட்பாளர்கள் பொதுப்பிரிவாக இருந்தால் 1,000 ரூபாயும், ஆதிதிராவிடர்
ஒதுக்கீடாக இருந்தால் 500 ரூபாயும், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்
வேட்பாளர்கள், பொது ஒதுக்கீடுகளுக்கு 600 ரூபாயும், ஆதி திராவிடர்
பிரிவுகளுக்கு 300 ரூபாயும் 'டெபாசிட்' செலுத்த வேண்டும்; சொத்து விவரங்கள்
அடங்கிய உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சி மன்ற
உறுப்பினராக போட்டியிடும் வேட்பாளர், 200 (பொது)அல்லது 100 ரூபாய் (ஆதி
திராவிடர்) 'டெபாசிட்' தொகையுடன், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மனு
தாக்கல் செய்யலாம்.