/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : செப் 06, 2011 12:01 AM
தர்மபுரி: தர்மபுரி ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லூரி சேர்மன் ரமேஷ் தலைமை வகித்தார். டிரஸ்டி பார்வதி ரமேஷ், இயக்குனர்கள் வெங்கடேசன், கோபிநாத், சேகர், முதன்மை நிர்வாக அலுவலர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் தொல்காப்பியரசு வரவேற்றார். 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பளர் கோபிநாத் பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் அதிகளவில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். டாக்டர், ஆடிட்டர் போன்ற படிப்புகளுக்கு இருந்த வரவேற்பு இன்று இன்ஜினியரிங் படிப்பு பெற்றுள்ளது. ஐ.டி.. படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று அதிகளவில் பொருள் ஈட்டியுள்ளனர். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும், ஒரு லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து முடித்து வருகின்றனர். இன்ஜினியரிங் படிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இத்துறையில் சர்வதேச அளவில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தாண்டவேல் நன்றி கூறினார்.