/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இயற்கை சார் நிறமேற்றல் ஆய்வு துவக்கம்இயற்கை சார் நிறமேற்றல் ஆய்வு துவக்கம்
இயற்கை சார் நிறமேற்றல் ஆய்வு துவக்கம்
இயற்கை சார் நிறமேற்றல் ஆய்வு துவக்கம்
இயற்கை சார் நிறமேற்றல் ஆய்வு துவக்கம்
ADDED : அக் 02, 2011 01:50 AM
திருப்பூர் : நிப்ட் - டீ கல்லூரியில், இயற்கை சார் நிறமேற்றல் ஆய்வு துவங்கப்பட்டது.மத்திய அரசு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், தொழில் நிறுவனங்களில் வளர்ச்சி, ஏற்றுமதி சந்தையில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ள புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியை தேர்வுசெய்து, 'நிப்ட்-டீ பின்னலாடை தொழில்நுட்ப இன்குபேஷன் மையம்' செயல்படுத்தப்படுகிறது. தகுதியுடைய திட்டங்களை ஆராய்ந்து, வர்த்தகப்படுத்துவதே மையத்தின் நோக்கம்; இதற்காக மத்திய அரசு 85 சதவீதம்; கல்லூரி சார்பில் 15 சதவீத நிதி ஒதுக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இம்மையத்தில் முதன்முறையாக திருப்பூர் டெக்ஸ்டைல் கமிட்டி உதவியுடன் 'இயற்கை சார் நிறமேற்றல்' ஆய்வு துவங்கப்பட்டது. நிப்ட்-டீ கல்லூரியில் நடந்த விழாவில், கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் ஆய்வு திட்டத்தை துவக்கிவைத்தார்; துணைத்தலைவர் முருகன், ஆராய்ச்சியாளர் ராமசாமி மற்றும் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இம்மையத்தில் தனிநபர் மற்றும் தொழில் முனைவோர் தொழில் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை பதிவுசெய்து, ஆராய்ச்சி மூலம் அங்கீகாரம் பறலாம்; விவரங்களுக்கு, 0421 2374200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


