Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருவள்ளுவர் அறக்கட்டளையில் பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை

திருவள்ளுவர் அறக்கட்டளையில் பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை

திருவள்ளுவர் அறக்கட்டளையில் பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை

திருவள்ளுவர் அறக்கட்டளையில் பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை

ADDED : ஜூலை 27, 2011 01:19 AM


Google News

புதுச்சேரி : திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் பட்டப்படிப்பு மாணவர்கள் இலவச கல்வி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011-12ம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதில் உதவித் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவராகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவராகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் தற்போது பட்டப்படிப்பு (இளநிலை, முதுநிலை) படித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம் அல்லது நடப்பு கல்வியாண்டில் பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்களாகவும் இருக்கலாம். உதவித் தொகை விண்ணப்பம் திருவள்ளுவர் அறக்கட்டளையின் இணையதளத்திலிருந்து (தீதீதீ.திச்டூடூததிச்ணூtணூதண்t.ணிணூஞ்) பெற்றுக் கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் கிடைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 98947 80910 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us