ADDED : செப் 27, 2011 12:02 AM
தொட்டியம்: தொட்டியம், தோளுர்ப்பட்டி, கொங்குநாடு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் லூயிஸ் டிசோசா முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்து, பல்கலை கழகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், கல்லூரி அளவில் துறை வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பல்கலைக்கழகத்தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் தந்த பேராசிரியர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவியர், துறை பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.