ஸ்ரீவி.,யில் தேவை நவீன சாயப்பட்டறை
ஸ்ரீவி.,யில் தேவை நவீன சாயப்பட்டறை
ஸ்ரீவி.,யில் தேவை நவீன சாயப்பட்டறை
ADDED : செப் 20, 2011 09:33 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: நெசவு தொழிலை ஊக்குவிக்க,ஸ்ரீவில்லிபுத்தூரில் நவீன
சாயப்பட்டறை அமைக்க வேண்டுமென நெசவாளர்கள்
விரும்புகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்,
ஐந்தாயிரத்திற்கும் அதிகமான விசைத்தறிகளும் உள்ளன. 15 ஆயிரத்திற்கும்
அதிகமானோர் நெசவு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள், தனியார்
விசைத்தறிகளில் காட்டன் சேலைகள், துண்டு, லுங்கிகளை உற்பத்தி செய்கின்றனர்.
நெசவு தொழில்களுக்கு பயன்படும் நூல்களுக்கு சாயம்பிடிக்க, அரசு சார்பில்
நவீன சாயப்பட்டறை இல்லை. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களே தங்கள் தேவைகளுக்கு
ஏற்ப சொந்தமாக நூல்களை சாயம் பிடித்து வருகின்றன.
விசைத்தறி
வைத்திருப்பவர்களும், வீடுகளில் கைத்தறி வைத்திருப்பவர்களும் தனியாரிடம்
அதிக விலை கொடுத்து, சாயம் பிடிக்க வேண்டியதுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு
முன், ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வந்த அரசு கூட்டுறவு நூற்பாலை
சாயப்பட்டறையில், தனியாரும் குறைந்த விலையில் சாயம் பிடித்து வந்தனர்.
தற்போது கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்டு விட்டன. நெசவு தொழில் நலிவடைந்து
வரும் நிலையில், சாயம் பிடிப்பதற்காக அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதால்,
நெசவு உற்பத்தியாளர்கள் சிரமமடைகின்றனர். நெசவு உற்பத்தியாளர்கள் பயனடையும்
வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு நவீன சாயப்பட்டறையை அமைக்க வேண்டும்.