Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அச்சுதானந்தன் பதட்டத்தில் உள்ளார்: கேரள அமைச்சர் கடும் விமர்சனம்

அச்சுதானந்தன் பதட்டத்தில் உள்ளார்: கேரள அமைச்சர் கடும் விமர்சனம்

அச்சுதானந்தன் பதட்டத்தில் உள்ளார்: கேரள அமைச்சர் கடும் விமர்சனம்

அச்சுதானந்தன் பதட்டத்தில் உள்ளார்: கேரள அமைச்சர் கடும் விமர்சனம்

ADDED : செப் 04, 2011 10:59 PM


Google News
Latest Tamil News

கொச்சி: பல ஆண்டுகளுக்கு முன், ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து சி.பி.ஐ.,விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஐகோர்ட்டை நாடி உள்ள நிலையில், 'அவரும், அவரது மகனும் முறைகேடுகளில் சிக்கியுள்ளதால், முன்னாள் முதல்வர் பதட்டத்தில் உள்ளார்' என, மாநில தொழில் அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி தெரிவித்தார்.



கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 1990ம் ஆண்டு தனியார் ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை முடிவடையாமல், கைவிடப்பட்ட நிலைக்கு சென்றுள்ளது. இவ்வழக்கில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், தற்போது மாநில தொழில் அமைச்சராக பதவி வகித்து வரும் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, அவரது உறவினர் ரகூப் உட்பட பலர் தொடர்புடையதாகவும் புகார் எழுந்தது. இவ்வழக்கை குஞ்ஞாலிக்குட்டியின் பணபலம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை கொண்டு ரகூப், சாட்சிகளையும், பிறரையும் பயன்படுத்தி வழக்கை இல்லாமல் செய்து விட்டதாகவும் புகார் எழுந்தது. இவ்வழக்கு, இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் (2006-2011ம் ஆண்டு வரை), மாநில முதல்வராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் காலத்திலேயே கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவிட்டனர்.



இந்நிலையில், தற்போது மாநிலத்தில் ஆட்சி மாறி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், இவ்வழக்கு குறித்து சி.பி.ஐ.,விசாரிக்கக்கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மாநில தொழில் அமைச்சர் குஞ்ஞாலிக்குட்டி நேற்று கோழிக்கோட்டில் கூறுகையில், 'இது முழுக்க முழுக்க விளம்பரத்திற்காக அச்சுதானந்தன் செய்துள்ளது. இதில் விசாரிக்க ஒன்றுமில்லை. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக அச்சுதானந்தன் அடித்து வரும் விளம்பர ஸ்டண்ட்களில் ஒன்று. அவர் மீதும், அவரது மகன் மீதும் நடந்து வரும் விசாரணைகளால், முன்னாள் முதல்வர் மிகவும் பதட்டத்தில் உள்ளார்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us