திருப்பதியில் புதிய சேர்மன், அறங்காவலர் குழு பதவியேற்பு
திருப்பதியில் புதிய சேர்மன், அறங்காவலர் குழு பதவியேற்பு
திருப்பதியில் புதிய சேர்மன், அறங்காவலர் குழு பதவியேற்பு
ADDED : செப் 04, 2011 10:51 PM

நகரி: திருப்பதி தேவஸ்தான போர்டின் அறங்காவலர் குழுவினர், திருமலை கோவிலில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிய சேர்மனாக கே.பாபிராஜு நேற்று முன்தினம் இரவு பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட முத்யம் ரெட்டி, சூரியபிரகாஷ் ராவ், ராஜேஸ்வரி ஆகிய மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரி சுப்பிரமணியத்திற்கு தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். போர்டின் புதிய சேர்மன், உறுப்பினர் பதவியேற்றுக் கொண்டவர்களை தேவஸ்தான முதன்மை அர்ச்சகர் ரமணா தீட்சிதர், பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகளும் ஆசீர்வதித்தனர். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பொன்னால லட்சுமய்யா, திருப்பதி எம்.பி., சிந்தா மோகன், எம்.எல்.ஏ., சிரஞ்சீவி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி காரணமாக, இலவச வரிசை மூலம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய மூன்று மணிநேரம் தடை செய்யப்பட்டது. வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.