/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தமிழர்கள் இன்முகத்துடன் பழகுகின்றனர்: வெளிநாட்டு மாணவர்கள் "பெருமிதம்'தமிழர்கள் இன்முகத்துடன் பழகுகின்றனர்: வெளிநாட்டு மாணவர்கள் "பெருமிதம்'
தமிழர்கள் இன்முகத்துடன் பழகுகின்றனர்: வெளிநாட்டு மாணவர்கள் "பெருமிதம்'
தமிழர்கள் இன்முகத்துடன் பழகுகின்றனர்: வெளிநாட்டு மாணவர்கள் "பெருமிதம்'
தமிழர்கள் இன்முகத்துடன் பழகுகின்றனர்: வெளிநாட்டு மாணவர்கள் "பெருமிதம்'
ADDED : செப் 04, 2011 01:34 AM
புதுச்சேரி:''தமிழர்கள் இன்முகத்துடன் பழகுகின்றனர்'' என புதுச்சேரியில் தமிழ் கற்க வந்த வெளிநாட்டு மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், அயல்நாட்டு மாணவ மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் வகுப்புகள் நடத்தி தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கிறது.இந்தாண்டுக்கான தமிழ் வகுப்புகள் அலியான்ஸ் பிரான்சேவில் கடந்த ஜூலை 27 ம்தேதி துவங்கி 6 வாரம் காலம் நடந்தது. இதில் பிரான்ஸ், போலந்து, நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டு மாணவர்கள் தமிழ் பேச கற்றுக்கொண்டனர்.
இதையடுத்து சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். முதல்வரிடம் 20 நிமிடங்கள் தமிழிலேயே கலந்துரையாடிய வெளிநாட்டு மாணவர்கள் 'தமிழ் கற்பது எளிதாக உள்ளது. 'தமிழர்களின் கலாசாரம், மொழி, மிகவும் பிடித்துள்ளது. தமிழர்கள் எளிதில் இன்முகத்துடன் பழகுகின்றனர். புதுச்சேரி மாநிலம் பல்வேறு கலாசாரங்களால் நிறைந்திருந்தாலும் அமைதியாக இருக்கிறது. அடுத்தாண்டும் இங்கு வந்து தமிழ் படிக்க ஆசையாக உள்ளது' என்றனர் .தமிழ் பயிற்சி முடித்த மேலடி, சாலமே, லாரா, பிரான்சிஸ்கா, மிரியம், லூக், பவுலினா, அனிசா, ஸ்டீனா, சிசில் ஆகிய வெளிநாட்டு மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து கூறினார்.
நிகழ்ச்சியில் கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம், தியாகராஜன் எம்.எல்.ஏ., மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி பண்பாட்டு நிறுவன இயக்குனர் பத்தவச்சல பாரதி, இலக்கிய துறை பேராசிரியர் சம்பத், பேராசிரியர் சிலம்பு செல்வராசன், ராஜ்பவன் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.