ADDED : ஆக 11, 2011 11:06 PM
திண்டிவனம் : திண்டிவனம் ஜெயபுரம் புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திண்டிவனம் ரோட்டரி சங்கம், புனித ஜோசப் மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் 185 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. டாக்டர்கள் லஷ்மி, பிருந்தா உள்ளிட்ட குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் சகோதரி ஆண்டனி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வம் மற்றும் அஷ்ரப், முகமது ஷெரீப், பிரகாஷ் கலந்து கொண் டனர்.