/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜிப்மரில் சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க தேதி அறிவிப்புஜிப்மரில் சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
ஜிப்மரில் சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
ஜிப்மரில் சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
ஜிப்மரில் சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு
ADDED : ஆக 11, 2011 04:17 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில், எமர்ஜென்சி
மெடிக்கல் டெக்னீசியன் சான்றிதழ் படிப்பில் சேர, வரும் 29ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிப்மர் டீன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 2011-12ம்
கல்வியாண்டில் அவசர மருத்துவ சிகிச்சை குறித்த சான்றிதழ் (எமர்ஜென்சி
மெடிக்கல் டெக்னீசியன் - இஎம்டி) படிப்பில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், வெள்ளைத் தாளில்
தங்களைப் பற்றிய விபரங்களை எழுதி, இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
31.12.2011 அன்று 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க
வேண்டும்.சான்றிதழ் படிப்பான இதில் அனஸ்தீசியா, அறுவை சிகிச்சை, மருந்தியல்
உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு, பயிற்சி
அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித் தொகை வழங்கப்படும்.
பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.3000 உதவித்
தொகையுடன் ஒரு ஆண்டுக்கு உள்ளிருப்பு பயிற்சி வழங்கப்படும்.இப்படிப்பில்
சேர விரும்புவோர், வரும் 29ம் தேதிக்குள், 'தி டீன், ஜிப்மர்' என்ற
முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான மாணவர்கள், செப்டம்பர் 7ம்
தேதி ஜிப்மரில் நடக்கும் நேர்காணலில் நேரடியாகவும் பங்கு பெறலாம்.இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.