சிவகங்கை:பிறப்பு, இறப்பு பதிவினை கம்ப்யூட்டரில் வழங்கும் முறை குறித்த
பயிற்சி முகாம் சிவகங்கையில் நடந்தது.துணை இயக்குனர் (சுகாதாரம்) அகல்யா
தலைமை வகித்தார்.புள்ளியியல் உதவி இயக்குனர் சம்பத் முன்னிலை வகித்தார்.
ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களுக்கு, பிறப்பு, இறப்பினை பதிவு
செய்தல் குறித்து, தேசிய தகவலியல் மைய மாவட்ட தகவலியல் அலுவலர்
ராமகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார். சுகாதாரத்துறையினர் ஏற்பாட்டை செய்தனர்.