குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் 86வது வாவுபலி பொருட்காட்சி வரும் 8ம் தேதி நிறைவடைகிறது. பொருட்காட்சி திடலில் விவசாயிகள் தனது உழைப்பால் உருவாக்கிய விவசாய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. பெரிய பலாபழம், உயரமான கீரை செடி, அதிகமான எடையுள்ள கிழங்கு, அதிகமான மிளகாய் காய்த்து குலுங்கும் செடி வகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. பொருட்காட்சியை கண்டுகளித்து செல்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு செடியாவது வாங்கி செல்கின்றனர். குமரி மாவட்டம் பச்சை பலேலேன அதிகமான குளிர்ச்சியாக காணப்படுவதற்கு இந்த பொருட்காட்சியின் பங்களிப்பும் முக்கியம் என்றே கூறலாம். இந்த ஆண்டு பொருட்காட்சியில் கடந்த ஆண்டை விட அதிகமான ரோஜா செடிகள் மற்றும் தென்னை, மா, பலா கன்றுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இதை போல் வீட்டின் அழகிற்கு அழகு சேர்க்கும் குரோட்டன்ஸ் செடிகள் விற்பனையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பல வண்ணத்தில் உள்ள அந்தோரியம் செடி முக்கிய அம்சம் பெற்று வந்தது. இந்த ஆண்டு ஆர்க்கிட் செடிகளின் விற்பனையும் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு வாவுபலி பொருட்காட்சியில் அறிமுக ரகங்களாக தாய்லாந்து நாட்டிலில் இந்து இறக்குமதி செய்யப்பட்ட பெனோலாப்பிசிஸ், கேட்லியா, டென்டிராபியோம், வாண்டா, மோகரா, ஆன்சிடியம் வகை ஆர்க்கிட்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வகை ஆர்க்கிட் பூ மஞ்சள், ஊதா நிறங்களில் காணப்படுகிறது. மேலும் பூவின் மேல் பகுதியில் புள்ளிபுள்ளியாகவும் உள்ளது. இந்த ஆர்க்கிட் ரகங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த வகை ஆர்க்கிட் செடிகள் 50 முதல் 700 வரை வரை விற்பனையாகிறது.