ADDED : ஆக 02, 2011 01:20 AM
பள்ளிபாளையம்: குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் யூனியன் தாஜ்நகர், ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், வெப்படை ஆகிய பகுதிகளில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
தாசில்தார் செல்லமுத்து தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் குப்புசாமி முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் சுப்ரமணி, ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, நகரச் செயலாளர் வெள்ளியங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர், பேரவை செயலாளர் செந்தில், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முகிலன், இளைஞரணி செயலாளர் ஜெயவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.