/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/எம்.குன்னத்தூரில் தொற்று நோய் அபாய நிலைஎம்.குன்னத்தூரில் தொற்று நோய் அபாய நிலை
எம்.குன்னத்தூரில் தொற்று நோய் அபாய நிலை
எம்.குன்னத்தூரில் தொற்று நோய் அபாய நிலை
எம்.குன்னத்தூரில் தொற்று நோய் அபாய நிலை
ADDED : ஆக 02, 2011 01:03 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த எம்.குன்னத்தூரில் குடிநீர்
குழாய் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.குன்னத்தூர் கிராமத்தில் பஸ்
நிறுத்தம் அருகே பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டது.
இங்கு ஒரே நேரத்தில் 15 பேர் தண்ணீரை பிடிக்கும் வகையில் பைப் லைன்
அமைத்துள்ளனர்.இந்த பைப் லைனில் குழாய் வசதி அமைக்காததால் எப்போதும் திறந்த
நிலையிலேயே இருக்கிறது. இதனால் தண்ணீர் வரும்போது எல்லாம் பைப் லைனில்
இருந்து குடிநீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது.பல நாட்கள் தேங்கி
நிற்கும் இந்த தண்ணீர் கழிவு நீராகவும், கொசுக்கள், உற்பத்தியாகும்
இடமாகவும் மாறி விட்டது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன்,
பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில்
கடந்த 20 நாட்களுக்கு முன் கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்திய
20க்கும் மேற்பட்டோர் திடீர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது. இதே போன்ற நிலை தொடர்வதை தடுக்க அதிகாரிகள் உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.