ADDED : ஜூலை 30, 2011 01:02 AM
ஓமலூர்: தீவட்டிப்பட்டி அருகே, கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை, போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சேலம் மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், பாஸ்கர்பாபு ஆகியோர் தீவட்டிப்பட்டி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நடுப்பட்டி அடுத்த காசாங்காடு கிராமத்தில் மனோகர் (60) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 500 கிராம் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல, கரட்டுக்காடு கிராமத்தில் ரத்தினம் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மனோகர், ரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.