/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் கருத்தரங்குகொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் கருத்தரங்கு
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் கருத்தரங்கு
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் கருத்தரங்கு
கொங்குநாடு இன்ஜி., கல்லூரியில் கருத்தரங்கு
ADDED : ஜூலை 15, 2011 12:02 AM
தொட்டியம்: தொட்டியம், தோளுர்பட்டி, கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் மெக்கானிக்கல் துறை சார்பில் மாற்று எரிபொருள் ஆல்கஹாலை பயன்படுத்தி இயந்திரங்களை இயக்குவது குறித்த கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு, மெக்கானிக்கல் துறைத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்தார். இமயம் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் லூயிஸ் டிசோஸா, மெட்டாஸ் அமைப்பைச் சேர்ந்த 208 மெக்கானிக்கல் துறை மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமரவேல், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மெக்கானிக்கல் துறை மாணவர் விவேக் செய்திருந்தார். மூன்றாம் ஆண்டு மாணவர் பப்திஸ்ட் நன்றி கூறினார்.