/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனுபண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
கடலூர் : பண்ருட்டி தொகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கலெக்டர் அமுதவல்லியை சந்தித்து கொடுத்த மனு: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.
பண்ருட்டியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும். பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். நெல்லிக்குப்பத்தில் பஸ்கள் செல்லாமல், சமூக விரோதிகளின் பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையத்தை வணிக வளாகமாக மாற்றுவதோடு, நெல்லிக்குப்பம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்து கடந்த ஆட்சியில் முடக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நெல்லிக்குப்பம் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணி மேற்கொள்ளாததால் நகரின் சுற்றுச் சூழல் மாசுபட்டு அனைத்து நோய்களும் பரவும் நிலை உள்ளது.
இதுகுறித்து தாங்கள் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்பினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி பண்ருட்டி தொகுதி பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., குறிப்பிட்டுள்ளார்.