ADDED : ஆக 01, 2011 01:28 AM
விழுப்புரம் : கார் மோதியதில் தொழிலாளி இறந்தார்.விழுப்புரம் அடுத்த வி.மாத்தூர்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி,43.
கட்டடத் தொழிலாளி. இவர் கடந்த 29ம் தேதி சிந்தாமணி கிராமத்திற்கு சென்றார். பஸ்சிலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது அந்த வழியே சென்ற குவாலிஸ் கார் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கார் டிரைவர் முகமது ரியாஸ், 32 என்பவரை கைது செய்தனர்.