Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நில மோசடி வழக்கில் கைதான மதுரை திமுகவினரை மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல்

நில மோசடி வழக்கில் கைதான மதுரை திமுகவினரை மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல்

நில மோசடி வழக்கில் கைதான மதுரை திமுகவினரை மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல்

நில மோசடி வழக்கில் கைதான மதுரை திமுகவினரை மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல்

ADDED : ஜூலை 21, 2011 02:25 AM


Google News

திருநெல்வேலி : நிலமோசடி வழக்கில் கைதாகி பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை திமுக நிர்வாகிகளை மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருமங்கலம் அருகேயுள்ள வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் சிவனாண்டி. இவரது மனைவி பாப்பா. நூல் மில் அதிபர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்ததாக மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதானவர்கள் பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இவர்களை பார்க்க மத்திய அமைச்சர் அழகிரி நேற்று காலை நெல்லை வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பெரியசாமி, மதுரை மாநகராட்சி துணைமேயர் மன்னன், தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை திமுக நிர்வாகிகளை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்தார். அப்போது தைரியமாக இருக்கவேண்டும் எனவும், சட்டரீதியாக வழக்குகளை சந்திக்கலாம் எனவும் ஆறுதல் கூறினார். சிறையில் இருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரி கூறுகையில், 'ஒரு வழக்கு விஷயமாக விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். என்ன வழக்கு என்ற விபரத்தை கூட தெரிவிக்காமல் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர் என மாவட்ட செயலாளர் தளபதி கூறினார்.



நண்பர்கள் என்ற முறையில் நான் அவர்களை பார்க்க வந்தேன். திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர். இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். இவ்வாறு மத்திய அமைச்சர் அழகிரி கூறினார். மத்திய அமைச்சர் அழகிரியை நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிப்பாண்டியன், எம்.எல்.ஏக்கள் மைதீன்கான், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், துணை மேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர்கள் சுப.சீத்தாராமன், தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் நமச்சிவாயம், ரேவதிஅசோக் வவேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us