"பூத் சிலிப்' பெற கூடுதல் வசதிகள் : தேர்தல் கமிஷனர் தகவல்
"பூத் சிலிப்' பெற கூடுதல் வசதிகள் : தேர்தல் கமிஷனர் தகவல்
"பூத் சிலிப்' பெற கூடுதல் வசதிகள் : தேர்தல் கமிஷனர் தகவல்
ADDED : செப் 09, 2011 12:44 AM

மதுரை: ''உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் 'பூத் சிலிப்' பெற கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழக தேர்தல் கமிஷனர் அய்யர் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது : போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. சட்டசபை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், உள்ளாட்சி பட்டியல் வெளியிடப்படும். திருத்தம் செய்யும் பணிக்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவர். வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதிநாள் வரை, விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கப்படும்.
அரசு ஊழியர்கள் 'பூத் சிலிப்' வினியோகம் செய்வர். கூடுதல் வசதியாக, ஓட்டளிக்கும் நாளில் சம்பந்தப்பட்ட பூத் அருகே 'சிலிப்' வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியாளர்கள் தேர்வு விரைவில் நடக்கும். சேலம், நெல்லை தவிர பிற மாநகராட்சிகள், எல்லை மாற்றத்துடன் தேர்தலை சந்திக்கின்றன. வார்டு ஒதுக்கீடு விவரம் இரண்டு நாளில் தெரிவிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நடந்து வருவதால், அதன் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அய்யர் கூறினார்.