கேபினட், தனிப்பொறுப்பு கிடைக்க உள்துறை அமைச்சக அறையும் காரணமாம்!
கேபினட், தனிப்பொறுப்பு கிடைக்க உள்துறை அமைச்சக அறையும் காரணமாம்!
கேபினட், தனிப்பொறுப்பு கிடைக்க உள்துறை அமைச்சக அறையும் காரணமாம்!
ADDED : ஜூலை 13, 2011 12:57 AM
புதுடில்லி:உள்துறை இணை அமைச்சர்களாக இருந்த மூன்று பேர், கடந்த சில ஆண்டுகளில், கேபினட் மற்றும் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். எனவே, இவர்களின் அலுவலகமாக செயல்பட்ட அறை, மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தது என, டில்லியில் பேச்சு எழுந்துள்ளது.
டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:டில்லி நார்த் பிளாக்கில் உள்ள, உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில், இணை அமைச்சர்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 127 எண் கொண்ட அறை, இணை அமைச்சர்களுக்கானது.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதலாவது ஆட்சிக் காலத்தின்போது, உள்துறை இணை அமைச்சராக இருந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுக்கு, இந்த அறை தான் ஒதுக்கப்பட்டது.ஐ.மு., கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், தனிப் பொறுப்புடன் கூடிய, இணை அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டார். இந்தாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, அவர், கேபினட் அமைச்சரானார்.ஐ.மு., கூட்டணி, இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, அஜய் மக்கான், உள்துறை இணை அமைச்சராக பதவியேற்றார்.
இவரும், 127வது அறையைத் தான், அலுவலகமாக பயன்படுத்தினார். கடந்த ஜனவரில் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது, அஜய் மக்கான், தனிப் பொறுப்புடன் கூடிய, விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.கடந்த ஜனவரியில், குருதாஸ் காமத், உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். நேற்று அமைச்சரவை மாற்றப்பட்டபோது, குடிநீர் வழங்கல் துறைக்கான, தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள் ளார். இவரும், அதே அறையைத் தான் பயன்படுத்தினார்.தற்போது, ஜித்தேந்தர் சிங், உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், அறை எண், 127ஐ தான், அலுவலகமாக பயன்படுத்தப் போகிறார். இவருக்கும் பதவி உயர்வு அதிர்ஷ்டம் கிடைக்கும் என, பேச்சு எழுந்துள்ளது.இவ்வாறு டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.